முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இரத்ததானம் முகாம் ஏராளமனோர் பங்கேற்பு! படங்கள் இணைப்புஅல்லாஹுவின் மகத்தான உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி குழு இனைந்து நடத்திய ”மாபெரும் இரத்ததான முகாம்”மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் 29.05.2016 அன்று கிளை செயலாளர் ஹாஜாமைதீன் தலைமையிலும், ஆசாத்நகர் ஒன்றிய தொடக்க பள்ளியில் முகாம் பொறுப்பாளர் J.பிர்தவ்ஸ் கான் மருத்துவ அணி மற்றும் கிளை தலைவர் நிஜாம்அலி முன்னிலையிலும் நடைப்பெற்றது.


அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில் 11 வருடங்களாக முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா நாடுகளிலும் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

காலை 10 மணிக்கு சிறப்பு அழைப்பாளர்கள்
DR இளங்கோ ,
DR m.விஜயராஜன் ,
DR k.சதாம்ஹுசைன்,
மு. முகைதீன் பிச்சை மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் , பிச்சை மணி நிருபர் ,
க. மாணிக்கம் நிருபர் ,
HM. ஹாஜா காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ,
M மாலிக் மெட்ரோ ரோட்டரி துணை ஆளுநர் ,
LN R. ராஜராம் வர்த்தக கழக தலைவர் , மற்றும் K. முகைதீன் அடுமை மாவட்ட தலைவர் முஸ்லீம் லீக், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்து இரத்ததான முகாம்மை வரவேற்று பேசினார்கள் நிகழ்ச்சி நிறைவு அடைந்ததும் DR இளங்கோ மற்றும் DR விஜயராஜன் அவர்களுக்கு திரு குர்ஆன் தர்ஜீமா மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் முஸ்லீம் தீவிரவாதிகள்? போன்றவைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

முன்னாள் தொண்டர் அணி நவாஸ் அவர்கள்
DR விஜயராஜன் அவர்கள் முன்னிலையில் இரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார் இரத்ததான முகாம் ஆரம்பம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை கிளை 1 செயலாளர் புஹாரி அவர்கள் சுறுசுறுப்பாக புர்த்தி செய்து கொடுத்து கொண்டுயிருந்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்துக்கொண்டு நெடு வரிசையாக சகோதரர்கள் நிற்றுகொண்டு இரத்ததானம் செய்ய காத்துயிருந்தனர் நேரம் செல்லச்செல்ல சகோதர சகோதரிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

55 க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு 36 சகோதர சகோதரிகள் குருதி கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
இதில் 36 நபர்களில் முஸ்லீம் பெண்கள் 11 சகோதரிகளும் மாற்றுமத சகோதரி ஒன்றும் மாற்றுமத சகோதரர்கள் 5 பேரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது தனி சிறப்பு. 15 சகோதர சகோதரிகள் இரத்த வகை குரூப் கண்டரிந்தனர் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


Tntj 05 Tntn 02 Tntj 03 Tntj 01
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.