ஒரே ’ரூட்’; 1000 டிக்கெட் - கல்லூரி பெண் தஹ்மிதா பானு புதிய சாதனைராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் செய்து ஆயிரம் பயணச் சீட்டுகளை சேகரித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் அருகே பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தஹ்மிதா பானு. இவர், கீழக்கரையில் தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.

இவர், தனது கல்லூரிக்கு செல்வதற்காக பனைக்குளத்திலிருந்து அழகன்குளம் செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்து மொத்தம் ஆயிரம் சீட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இதற்காக, இவருக்கு இந்திய சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.


இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமியப் பெண்ணை, ஆட்சியர் எஸ். நடராஜன் திங்கட்கிழமை வாழ்த்தினார்.


தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், ’பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனையை செய்துள்ளேன்’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.