குஜராத் முஸ்லிம்கள் படுகொலை : 11 பேருக்கு ஆயுள் தண்டனை; 12 பேருக்கு 7 ஆண்டு சிறைகுஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அகமதாபத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலம், கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது. கலவரத்தின்போது, அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த வன்முறையாளர்கள், அங்கு வசித்து வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி உட்பட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 69 பேரை படுகொலை செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 66 பேரில் 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தண்டனை விவரம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, தற்போது வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் அறிவித்தது. இதில் 12 பேருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.