திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லீம்களின் நோன்பு கஞ்சி விநியோகத்திற்காக 125 டன் தரமான அரசி -மாவட்ட கலெக்டர்திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லீம்களின் நோன்பு கஞ்சி விநியோகத்திற்காக 125 டன் தரமான அரசி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.

முத்துப்பேட்டை ஜீன் -18

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலைய துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ மோகன்ராஜ், டி.ஆர்.ஓ செல்வசுரபி, தாசில்தார் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கென நடப்புவருடத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 71 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப் படும். முதல் கட்டமாக தற்போது 3ஆயிரத்து 600 ஏக்கரில் இத்திட்டம் செயல் படுத்தபட்டுள்ளது. தற்போது பயனுக்கு வந்துள்ள நேரடி தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இங்கு உலர் கொப்பரைகள் கிலோ ரூ 59.50 க்கும் பந்து கொப்பரை கிலோ ரூ 62.40 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தொடர்ந்து 180 நாட்கள் செயல்படும் இந்நிலையங்களில் வேறு எந்தவித கட்டணமும் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யபடமாட்டாது. மாவட்டத்தில். தற்போது 64 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் கூடுதலாகவும் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். முஸ்லீம்களின் நோன்பு கஞ்சி விநியோகத்திற்காக 125 டன் தரமான அரசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 103 டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அரிசி கேட்டு விண்ணப்பித்திருந்த 67 பள்ளிவாசல்களில் 63 பள்ளிவாசல் நிர்வாகிகள் அரிசியை பெற்று சென்றுள்ளனர். அந்த அரிசியின் தரம்குறித்து அறியஅதன் சாம்பிள்கள் பெற்று பரிசோதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பருத்தி கொள்முதலுக்கான பணிகளும் நடந்துவருகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவட்டத்தில் 500ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிர் செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டில் 5ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கும் மாற்றாகவும் பணப்பயிராகவும் பருத்தி பயிரிடப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை திரும்பிபார்க்கும் வகையில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் தான் முதன்முதலாக
குட்டைநெட்டை தென்னை நாற்று தயாரிக்கும் நர்சரி துவங்கப்பட உள்ளது. இதற்காக 15ஏக்கர் நிலம் கையகப்படுத்தி பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிக்காக அரசு சார்பில் ஒருகோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார். அப்போது கொப்பரை கொள்முதலை துவக்கி வைத்தார். முன்னதாக முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் தமிழக அரசின் குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார், பின்னர் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கினைந்த வேளாண்மை அலுவலகம் கட்டுமான பணியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டறவு வாங்கி தலைவர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், மங்கள் கூட்டுறவு வாங்கி தலைவர் அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
புடம் செய்தி
1.முத்துப்பேட்டையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
3.முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் தமிழக அரசின் குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் துவக்கி வைத்தார்.
4.முத்துப்பேட்டையில் நேற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் துவக்கி வைத்து அடையாள அட்டை வழங்கினார்

 

 

13497808_515036185360681_6136377831053138651_o 13422290_515036008694032_5862113926789726443_o

13418585_515036188694014_1277632834957727673_o

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.