கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 17 பேர் மரணம்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி அனுதாபம்!கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 17 பேர் மரணம்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி அனுதாபம்!
தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளியை அடுத்த மேடுமலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று மதியம் சுமார் 60 பயணிகளுடன் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று  கொண்டிருந்த  தனியார் பேருந்து மீது, எதிர் புறமாக ஓசூர் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை தாண்டி பேருந்து மீது வேகமாக மோதியது. மேலும், பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மீதும் லாரி மோதியுள்ளது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

sdpi1-696x5491


இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்விபத்தில் பலியான மக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இவ்விபத்தில் அகால மரணமடைந்த அனைவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.