முத்துப்பேட்டை அருகே டாட்டா சுமா மோதி 2 பேர் படுகாயம். - டிரைவர் ஓட்டம்நாகை மாவட்டம், தாணிக் கோட்டகத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதன் மகன் மணிவன்னப்பாண்டியன்(40). சாமிநாதன் மகன் சுப்பிரமணியன்(54) உறவினர்களான இருவரும் ஒரே பைக்கில் தஞ்சை மாவட்டம், மதுக்கூரில் உள்ள உறவினர் வீட்டுத் துக்கத்திற்கு சென்றுவிட்டு முத்துப்பேட்டை வழியாக தானிக்கோட்டகம் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் தில்லைவிளாகம் பிரியும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது பின்புறம் வந்த டாட்டா சுமோ கார் இவர்கள் சென்ற பைக்கின் மீது மோதிவிட்டு அருகே இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் தூக்கிவீசப்பட்ட மணிவன்னப்பாண்டியன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேதரத்தினம் வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளான டாட்டா சுமா காரை பறிமுதல் செய்து தப்பி ஒடிய அதன் டிரைவரை தேடி வருகின்றார்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.