முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ 20 ஆயிரம் ரொக்கம் நகை கொள்ளை!முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ 20 ஆயிரம் ரொக்கம் நகை கொள்ளை!


முத்துப்பேட்டை ஜீன்-11

திருவாரூர் மாவட்டம்இ முத்துப்பேட்டை அருகே இரவு பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ20ஆயிரம் ரொக்கம்இ மற்றும் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல்சரகம் பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜேந்திரன். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கள்ளிக்குடி கிராமத்தில் நடைபெற்ற கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ20 ஆயிரம் ரொக்கம்இ 1 சவரன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது இதனால் அதர்ச்சி அடைந்த ராஜேநதிரன் இதுதொடர்பாக எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார.; அதன் பேரில் எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.