துபாயில் நடைபெற்ற 20வது குர்ஆன் மனனப்போட்டியில் கலந்து கொண்ட பிறவியில் பார்வை குறைபாடு உள்ள முகமது தாஹா!



துபாயில் நடைபெற்ற 20வது குர்ஆன் மனனப்போட்டியில் கலந்து கொண்டபிறவியில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான முகமது தாஹா!

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் குர்ஆன் மனனப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறுவது 20 ஆம் ஆண்டு மனனப்போட்டியாகும்.
இப்போட்டிக்கு 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து ஹாபிழ் முகமது தாஹா மகபூப் மட்டுமே கலந்து கொள்கிறார்.
பிறவியில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான முகமது தாஹா மகபூப் கேரளா மாநிலம் மலப்புரம் ஓமச்சம்புழை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் -மரியம் தம்பதியர் மகனாவார்.
கேள்வி ஞானத்தை கொண்டு சிறுவயதில் இருந்தே குர்ஆனை ஆர்வமுடன் மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடாமுயற்சியால் சிறந்த ஒரு ஹாபிழாக உருவாகியுள்ளார்.

போட்டியில் பங்கேற்க வந்த முகமது தாஹா மஹ்பூபை போட்டி ஏற்பாட்டாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று நேரடியாக வரவேற்று கௌரவப்படுத்தியுள்ளனர்.

 

நன்றி : குளச்சல் அஜீம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.