ஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கைஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்.” (அறிவிப்பாளர்.. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்..மிஷ்காத்)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்; ”யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள், அது எரிந்துபோன குளம்பாக இருந்தாலும் சரியே!” (நூல்: மிஷ்காத்)
ஒருநாள் ஒரு கிராமத்தில் கணவனும் மனைவியும் உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கும் சமயம் ஒரு வழிப்போக்கர் தாம் பசியோடிருப்பதாகவும் ஏதாவது உணவளிக்கும்படியும் வீட்டின் கதவை தட்டி வேண்டிக் கொண்டார். உணவு உண்பதற்குத் தயாராக இருந்த அக்கிராமவாசிக்குக் கோபம் வந்து விட்டது. உடனடியாக வெளியே வந்து அவ்வழிப்போக்கரை அடித்துக் கீழே சாய்த்து விட்டார்.
சிறிது நேரம் சென்றதும் அவ்வழிப்போக்கர் எழுந்து நேரடியாகப் பள்ளிவாசலுக்குச் சென்று ஒளு செய்து தொழுதுவிட்டு எல்லாம் வல்ல இறைவனிடம் ”யா அல்லாஹ்! என்னுடைய பசியைப் பற்றி மனிதர்களிடம் சொன்னால் எனக்கு அடி விழுகிறது. எனவே இனிமேல் எந்த மனிதனிடமும் சென்று பிச்சை கேட்கமாட்டேன். இன்று முதல் உன்னிடத்தில் தான் கேட்பேன்” என்று பிரார்த்தனை புரிந்தார். அதுமுதல் எல்லாம் வல்ல இறைவனின் கிருபை அந்த வழிப்போக்கருக்குக் கிடைக்க ஆரம்பமாயிற்று
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.