பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி முகாமை பார்வையிட்ட பிரவீன் தொகாடியாமுஸ்லிம்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து துப்பாக்கி முதலிய ஆயுதங்களை கொண்டு சமீபத்தில் பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி முகாம் ஒன்றை உத்திர பிரதேசத்தில் நடத்தியது. இதனை அடுத்து அப்பகுதி பஜ்ரங்தள் தலைவர் கைது செய்யப்பட்டார். தற்பொழுது மீண்டும் அது போன்ற ஒரு ஆயுத பயிற்சி முகாமை சுய பாதுகாப்பு முகாம் என்கிற பெயரில் பஜ்ரங்தள் நொய்டாவில் நடத்தியுள்ளது. இந்த முகாமிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவின் தொகாடியா வருகை புரிந்துள்ளார்.

இந்த முகாமிற்கு காலை 9 மணியளவில் வருகை புரிந்த பிரவின் தொகாடியா இது போன்ற முகாம்கள் இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு கடந்த 25 வருடங்களாக நடந்து வருகிறது என்றும் அது பா.ஜ.க ஆளும் மாநிலமானாலும் சரி, அல்லது காங்கிரஸ் மற்றும் கம்மியுனிஸ்ட்கள் ஆளும் மாநிலங்கலானாலும் சரி என்று கூறியுள்ளார்.

300 பேர் இந்த முகாமில் பங்கெடுத்துள்ளனர் . ஒரு வருட காலம் நடைபெறும் இந்த முகாமில் தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழும் பொது அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது முதலிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பயிற்சிக்காக, ஜூடோ, கராத்தே, நுன்சக், லத்தி, வாள் முதலியவற்றில் தேர்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் நடந்த இது போன்ற ஒரு முகாமில் தலையில் தொப்பி அணிந்த ஒருவர் தீவிரவாதியாக சித்தரித்து அவரை சுட்டுக்கொல்வது போல பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி பஜ்ரங்தள் தலைவர் மகேஷ் ஷர்மா கைது செய்யப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டார். இன்னும் இது போன்ற முகாம்களை சுல்தான்பூர், கோரக்பூர், பிலிபிட், மற்றும் ஃபதெஹ்பூர் ஆகிய இடங்களில் நடத்த இருப்பதாக பஜ்ரங்தள் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.