அதிக குழந்தை பெற்றுக்கொள்ள லேகியம் விற்கத்துவங்கிய - தொகாடியாஇந்துக்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும், இதற்காக தான் ஒரு லேகியம் தயாரித்துள்ளதாகவும் அதை அதிக அளவில் உணவில் சேர்துக்கொள்ள வேண்டும் என வி.ஹெச்.பியின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பாருச் மாவட்டம் ஜம்புசர் நகரில் நடைபெற்ற வி.ஹெச்.பி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரவீன் தொகாடியா கூறும்போது "இந்து ஆண்கள் பலருக்கும் ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியாவில் ஹிந்துக்களின் பங்கு வெகுவாக குறைந்துவிட்டது. அனைவரும் வீட்டிற்குச் சென்று தனது ஆணுறுப்பை வணங்க வேண்டும் என்று கூறினார்.

இந்துத்துவா கொள்கைகளை நடைமுறைப்படுத்த இளைய இரத்தங்கள் தேவைப்படுகிறது. ஹிந்து தம்பதிகள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்வதை காட்டிலும் நாம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.  லவ் ஜிஹாத் செய்து இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதையும் கடுமையாக தடுக்க வேண்டும். இத்தகைய செயல்களிலாலேயே இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

வழக்கம்போலவே வி.ஹெச்.பி கூட்டங்களில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் விண்ணைப்பிளக்க மேலும் உரையாற்றிய பிரவீன் தொகாடியா கூறும்போது " இனி ஹிந்துக்களின் மக்கள் தொகை பெருகும், மதமாற்றத்திற்கு அனுமதி அளிக்காதீர்கள்,  கர்வாப்சிக்கு ஒத்துழையுங்கள், லவ் ஜிஹாதிற்கு எதிராய் நில்லுங்கள், வங்காளதேச முஸ்லிம்கள் ஊடுறுவுவதை தடுத்து நிறுத்துங்கள். இதனால் நமது ஹிந்துக்களின் ஜனத்தொகை கூடும் என்றார். மேலும் ஹிந்து இளைஞர்கள் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் இதனாலேயே பெரும்பாலன இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது.

இப்பிரச்சனைக்கு தீர்வு அளிப்பதற்கு தானே ஒரு லேகியத்தை தயாரித்திருப்பதாகவும், அதை ரூபாய் 600க்கு விற்றுவருவதாகவு, அங்கு கூடியிருந்த ஆண்களுக்கு அதனை ரூபாய் 500க்கு தருவதாகவும், அனைவரும் வாங்கிச்சென்று தனது மனைவியிடத்தில் கொடுத்து உணவோடு கலந்து சாப்பிட்டு வரவேண்டும், இதனால் நீங்கள் ஆண்மையோடு இருப்பீர்கள் இதன் மூலம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

ஜம்பூசர் நகரில் 30% முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.  நம்முடைய ஜனத்தொகையை நாம் அதிகப்படுத்தினால் தான் மாடுகள் கொல்லப்படுவதை இங்கு தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்.

இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்காமல் வளர்ச்சி என்று கூறி அதி நவீன வசதிகளை செய்து கொடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் ஹிந்துக்கள் இல்லாமல் போனால் நீங்கள் கொண்டு வரும் நவீன வசதிகளை யார் பயன்படுத்துவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திரிசூலம் வழங்கப்பட்டது. இந்த தீர்சூலத்தை இந்து தர்மத்திற்காக பயன்படுத்துவோம் என்றும், அதனை மற்ற பிற ஹிந்துக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்னும் உறுதி மொழியும் பெறப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.