முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் மரணம்
முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலிருந்து கீழ விழுந்து படுகாயம் அடைந்த மின் ஊழியர் சாவு


முத்துப்பேட்டை ஜீன்-22

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு மகன் சுப்பிரமணியன்(40) இவர் முத்துப்பேட்டை மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு அருகே உள்ள மின்சார கம்பத்தில் ஏறி சுப்பிரமணியன் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். அப்போது மின்சாரம் அவர் மீது பட்டு தூக்கி வீசப்பட்டார் இதில் மின்சார கம்பத்திலிருந்து கீழவிழுந்த சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக சுப்பிரமணியன் மீட்கபட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த சுப்பிரமணியத்திற்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சுப்பிரமணியன் இறந்த சம்பவம் முத்துப்பேட்டை மின்சார வாரியத்தின் அலைச்சியம் என்று அவரது  குடுபத்தினர் குற்றம்சாற்றியுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று சுப்பிரமணியத்தின் மனைவி கோமதி புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.