அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்



1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
சுப்ஹானல்லாஹில் அளீம்.


பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.

சிறப்பு: மீசான் தராசில் அதிக
கனமுள்ளது.
நூல்: புகாரி. 66820.

2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

சிறப்பு: கடலின் நுரை அளவு பாவங்கள்
மன்னிக்கப்படும்.
நூல்: புகாரி. 6405

3. லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர்.

பொருள்: வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்.
அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

சிறப்பு: 100 நன்மைகள் எழுதப்படும். 100
தீமைகள் அளிக்கப்படும். ஷைத்தானின்
தீங்கிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
நூல்: புகாரி. 3293

4. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்

பொருள்: இறைவன் தூயவன்,
அவனுக்கே எல்லாப் புகழும், அவன் மிகப்
பெரியவன்.

சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும்
தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.
நூல்: முஸ்லிம்.118.

5. அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன், Fபீஹி.

பொருள்: தூய்மையும் வளமும்
வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே உரியது.

சிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம்.
நூல்: முஸ்லிம்.1051.

6. அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா

பொருள்: அல்லாஹ் மிகப்
பெரியவன் என்று பெருமைப்
படுத்துகிறேன். எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே உரியது என்று
அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ்
பரிசுத்தமானவன் என்ற காலையிலும்
மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு: இதற்காக வானத்தின்
வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.
நூல்: முஸ்லிம்.1052.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.