முத்துப்பேட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிமனு.முத்துப்பேட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர்கள் மனு.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் பைப்பாஸ் சாலை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை பல ஆண்டுகளாக நரிகுறவர்கள் இனத்தை சேர்ந்த மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்த இடத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு நரிகுறவர் குடும்பத்தை சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளக்காலங்களில் மழைநீர் தேங்கி குடியிருப்பை சூழ்ந்துவிடும். அதனால் மிகவும் தாழ்வாக இருந்த இந்த இடத்தை அந்த மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து தரை மட்டத்தை உயர்த்தி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரிகள், தாலுக்கா அலுவலகம், பொது பணித்துறை அலுவலகம் போன்றவைகள் கட்ட அந்த இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்துறை அதிகாரிகள் அங்கு குடியிருந்த 24 குடும்பங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களிடம் அதே பகுதியில் உள்ள நம்மங்குறிச்சி சாலையில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக் கொள்ளும்படியும,; அந்த இடத்திற்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் கூறி உள்ளனர். இதனை நம்பி அந்த மக்களும் குடியிருப்பை காலி செய்து மாறிக் கொண்டனர்.

ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு தற்பொழுது உள்ள இடத்திற்கு பட்டாவும் வழங்கவில்லை. அப்பகுதிக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர்; சூழ்ந்த குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விச பூச்சிகள், பாம்புகளின் தொல்லைகளுடன் குழந்தைகளை வைத்து கொண்டு வசிக்கும் பரிதாப நிலையில் உள்ளனர். இது குறித்து பலமுறை இம்மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட அதிகாரிகளிடம் புகார் மனு மற்றும் நேரில் சந்தித்தும்; முறையிட்டும் அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நரிகுறவர் இனத்தின் பிரதிநிதிகள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் சென்று தலைவர் கோ.அருணாச்சலத்திடம் கோரிக்கை மனு ஒன்று வாங்கினர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் சுமார் 25 குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகிறோம். நாங்கள் அணைவரும் அ.தி.மு.கவில் இருந்து வருகிறோம். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அந்த இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்கினார். அதன் பின்பு எங்கள் குடியிருப்பை மாற்று இடம் தந்தனர். இந்த இடத்திற்கு சாலை வசதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் நாங்கள் சிரமம் அடைகிறோம். எனவே தாங்கள் நேரடியாக பார்வையிட்டு எங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.