யார் இந்த ரகுராம்ராஜன்? ஒரு தமிழர்‬ என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்......



‎RSS‬ மற்றும் காவி தீவிரவாதிகளின் இந்துத்துவா சூழ்ச்சியால் மனம் உடைந்து பதவியை உதறி தள்ளும் தன்மான தமிழன்‬

யார் இந்த ரகுராம்ராஜன்???
ஒரு தமிழர்‬ என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்......

இந்த கேள்விக்கான விடை அறியாமல் அவரது பணி ஓய்வு அறிவிப்பு நம் மீது எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்த ரகுராம்ராஜன், உலக பொருளாதாரத்திற்கு வழங்கிய சிறந்த பங்களிப்பிற்காக பல்வேறு உயரிய விருதுகளை வென்றிருக்கிறார். புகழ்பெற்ற 'டைம்' இதழின் 2016ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பேர் பட்டியலிலும் ரகுராம்ராஜன் இடம் பெற்றிருக்கிறார்.

உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக திகழும் ரகுராம் ராஜன், முந்தைய காங்கிரஸ் அரசால் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை ரகுராம்ராஜன் மேற்கொண்டு வருகிறார். இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய ஸ்திரதன்மைக்கு ரகுராம்ராஜன் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
ரகுராம்ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக, அவர் இருமுறை பிரதமர் நரேந்திரமோடிக்கும் கடிதம் எழுதியிருந்தார். ரகுராம் ராஜன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருவதாகவும் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை வேறாக உள்ளது. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி ஏற்கும் முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6 விழுக்காடாக இருந்தது. ஆளுநராக ரகுராம்ராஜன் பொறுப்பேற்ற பின், 2013-14இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 விழுக்காடாகவும், தொடர்ந்து 2015-16இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக்காடாகவும் உயர்ந்தது. 2015-16ம் ஆண்டின் 4வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.9 விழுக்காடாக உள்ளது. இதன்மூலம், உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.

பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி சுப்பிரமணியசாமி கூறிய குற்றச்சாட்டை ஆராய்ந்தோமேயானால், ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம்ராஜன் பொறுப்பேற்பதற்கு முன்பாக நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் மதிப்பு 9.52 விழுக்காடாக இருந்தது. மோடி அரசு 2014 மே மாதம் பதவியேற்கும் போது நுகர்வோர் விலை குறியீட்டு எண் 8.28 விழுக்காடாகவும், 2016 ஏப்ரலில் அது 5.24 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.

சுப்பிரமணியசாமியின் குற்றச்சாட்டை பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கவில்லை. ரகுராம்ராஜனை நீக்கக்கோரிய சுப்பிரமணியசாமியின் கருத்துக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 'ரகுராம்ராஜன் போன்ற சிறந்த பொருளாதார மேதையை பெறும் தகுதியை மோடி அரசு பெற்றிருக்கவில்லை' என்று சிதம்பரம் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம்ராஜன் முழு இந்தியராக செயல்பட மாட்டார் என்ற குற்றச்சாட்டும் முக்கியமானதாக கூறப்படுகிறது. ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட போதும் இத்தகைய குற்றச்சாட்டு கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி முரளி மனோகர் ஜோஷி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இதுகுறித்து அப்போது பதிலளித்த ரகுராம்ராஜன், தான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டு குடியுரிமை கோரியும் விண்ணப்பிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டை வளர்ச்சிப்பாதையில் மிடுக்காக நடைபோட வைத்த ரகுராம்ராஜனின் 3 ஆண்டு பணிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அவரை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பணியில் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொருளாதார வல்லுநர்கள் மட்டுமின்றி, தொழிற்துறையினரிடம் இருந்தும் வந்தவண்ணம் உள்ளது. இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில், ரகுராம்ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மேலும் 2 ஆண்டுகள் தொடர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, மத்திய அரசின் விருப்பத்தை ஏற்க ரகுராம்ராஜன் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரகுராம்ராஜன் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அவர் இந்திய பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்த குடும்பத்தில் 1963இல் போபாலில் பிறந்தார் ரகுராம்ராஜன். 1974 முதல் 1981 வரை டெல்லி பொதுப் பள்ளியில் பயின்றார். டெல்லி ஐ.ஐ.டியில் இளங்கலை பட்டத்தை எலெக்ட்ரிகல் எஞ்ஜினியரிங் பாடத்தில் தங்கப் பதக்கத்துடன் பெற்ற ரகுராம்ராஜன், 1987இல் முதுகலை டிப்ளமோ பட்டத்தை அஹமதாபாத் ஐ.ஐ.எம்மில் தங்கப் பதக்கத்துடன் பெற்றார். 1991இல் வங்கித்துறை ஆய்வுக் கட்டுரைக்கு முனைவர் பட்டம் பெற்றார்.

2003-06இல் ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார பணியாற்றிய போது, அப்பதவி வகித்த இளம் வயதுடையவர் என்ற சிறப்பை ரகுராம்ராஜன் பெற்றார். 2016ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு பதிலாக ரகுராம் ராஜன் பெயரையே டைம் இதழ் தேர்வு செய்திருந்தது. சில ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த மோசமான உலக பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே அனுமானித்து கூறியிருந்த ரகுராம்ராஜனை, “பொருளாதார தீர்க்கதரிசி” என டைம் இதழ் புகழாரம் சூட்டியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பொருளாதார வல்லுநரை தான் இந்தியா இழக்கப் போகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.