வெளிநாடுகளுக்கு பணிப்பெண்கள் அனுப்பப்படுவதை நிறுத்தத் தீர்மானம்! : இலங்கை அரசாங்கம்வெளிநாடுகளுக்கு பணிப்பெண்கள் அனுப்பப்படுவதை நிறுத்தத் தீர்மானம்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை படிப்படியாக நிறுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அமைச்சர் ராஜித சேனாரட்ன ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்குகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்கள் துஷ்பிரயோத்திற்கு உட்படுகின்றமை, கட்டண உயர்வு, ஊழியர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவின் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள், பயிற்சி பெறாத பணியாளர்கள்மூலம் ஆண்டுதோறும் அன்னியச் செலாவணி 7 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு வந்துசேருவதாகவும் தெரிவித்தார்.

எனினும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்கள் அனுப்பப்படுவது குறித்து ஆராய்வதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன விடேச குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், படிப்படியாக பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதோடு இறுதியில் முழுமையாக அதனை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பணிப்பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை ஊக்குவிக்கக்கூடாது எனவும், அதனால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணிப்பெண்களாகச் செல்வோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதுடன் பல கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர். அத்துடன் அவர்களது பிள்ளைகள் போதைப்பொருட் களுக்கு அடிமையாவதுடன் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூர் ஊழியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இத்திட்டம் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மாத்திரம் ஆயிரத்து 650 வீட்டுப்பணிப்பெண்கள் அவர்களது எஜமானார்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதோடு, துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.