முத்துப்பேட்டை அருகே பைக் மீது மினி லாரி மோதி விபத்து.தொழிலாளி பலி. ஒருவர் படுகாயம். (படங்கள் இணைப்பு)முத்துப்பேட்டை அருகே பைக் மீது மினி லாரி மோதி விபத்து. 108 ஆம்புலன்ஸ் வராததால் தொழிலாளி பலி. ஒருவர் படுகாயம். 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு.


முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரத்தில் பைக் மீது மினி லாரி மோதியதால் விபத்து. 108 ஆம்புலன்ஸ் வராததால் தெழிலாளியின் உயிர் பிரிந்தது. பரபரப்பு.

நாகை மாவட்டம், தாணிக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெட்சினாமூர்த்தி மகன் பாஸ்கர்(42). அதே போல் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் துரைராஜ்(48). தச்சி தொழிலாளிகளான இருவரும் முத்துப்பேட்டைக்கு வேலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கோபாலசமுத்திரம் பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு மனிலாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நடு ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் விபத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகையன் ஆகியோர் தனியார் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு அதில் படுகாயம் அடைந்த துரைராஜையும் பலியான பாஸ்கர் உடலையும் ஏற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாஸ்கரின் உடல் மருத்துவ மனையில் இறக்கி வைக்கப்பட்டு படுகாயம் அடைந்த துரைராஜிற்கு முதலுதவி அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சோக்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை பேலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளான மினி லாரியை பறிமுதல் செய்து அதன் டிரைவர் மதுரையைச் சேர்ந்த காசி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து தடைப்பட்டது. விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் தொழிலாளி நடுரோட்டில் துடிதுடித்து பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.


13445297_515779645286335_2273836281583766161_n 13495402_515779628619670_8904904956890615706_o

 


படம் செய்தி:
1. விபத்தில் பலியான பாஸ்கர்.
2. தனியார் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட பாஸ்கரின் உடல் மற்றும் படுகாயம் அடைந்த துரைராஜ்.

 


மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.