சுவாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவித்ததால் சர்ச்சைகுஜராத்தின் சூரத் அருகே சுவாமி நாராயண் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. சூரத் மாவட்டத்தின் லக்ஸனா கிராமத்தில் சுவாமி நாராயண் மிஷன் பள்ளி உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமையன்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளியில் இருந்த சுவாமி நாராயண் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர் அணியும் சீருடையான காவி டவுசர், வெள்ளை சட்டை, காலில் ஷூ அணிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது

கோடை விடுமுறையில் இந்த பள்ளியில் 20 நாட்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமான ஷாகா நடைபெற்றிருக்கிறது. அப்போதுதான் இந்த சீருடையும் அணிவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா கூறுகையில், கோயில் நிர்வாகிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும் என்றார். குஜராத் மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி கூறுகையில், சுவாமி சிலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் சீருடை அணிவிக்கப்பட்டிருப்பதில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.