தீவிரவாதத்தை எதிர்க்கும் இஸ்லாம்இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சில அடிப்படைவாதிகள் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கொச்சைப்படுத்தி மாற்றுமத மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய பிழையான எண்ணங்களை உருவாக்கி முஸ்லீம்களையும் அவர்கள் பின்பற்றும் மார்க்கத்தையும் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்களை தீவிரவாதக் கும்பலுடன் முடிச்சு போடும் நாடக அரங்கேற்றங்களை ஞானசாரர் போன்றோர் உடன் நிறுத்த வேண்டும்.
ஏனெனில் எமது ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம் ஓர் பிரஜையின் உரிமை என்பதற்காக நினைப்பதை எல்லாம் பேசி மக்களின் உணர்வுகளை தூண்ட யாருக்கும் அருகதை கிடையாது என்பதனை ஞானசாரர் போன்ற அடிப்படைவாதிகள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.
உண்மையில் இஸ்லாம் மார்க்கம் தீவிரவாத்தை ஆதரிக்கவில்லை. இதனை உறுதிப்படுத்த நாம் இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்பதனைப் பார்ப்போம். இது ஒரு அரபுச் சொல்லாகும் இது அமைதி எனும் அகராதிப் பொருளைக்கொண்டுள்ளது இன்னும் அடிபணிதல், சரணடைதல் போன்ற பல பொருள்களைவும் கொண்டுள்ளது. எனவே இது ஒரே இறைவனுக்கு அடிபணிந்து அவனை மாத்திம் வணங்குமாறு அவன் அடியார்களை வேண்டி நிற்கிறது.
ஆனாலும் வேடிக்கை என்னவெனில் இன்று முஸ்லீம்கள் இறைவனை துதிப்பதற்காக கட்டப்பட்ட பள்ளிவாயல்ளை தீவிரவாதம் போதிக்கப்படும் ஓர் இடம் என கொச்சைப்படுத்தியும் இஸ்லாமிய சரீஅத் சட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் மத்ரசாக்களை ஆயுதப் பயிற்சி வழங்கும் தளமாகவும் அடிப்படைவாதிகள் சித்தரிப்பது முஸ்லீம்களின் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. ஆகையால் இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பும் அடிப்படைவாத அமைப்புக்களை அரசு தடைசெய்து ஒவ்வொரு பிரஜையும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றி போதனைகள் செய்ய சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.
என்றாலும் இஸ்லாமியர்களின் உயிர்கள், உடமைகள், தன் மானங்கள் கயவர்களினால் சூரையாடப்படுகின்ற போது மௌனியாக நிற்;காமல் அதற்காக போராட வேண்டும் அப்படி போராடி அதில் அரவர்கள் (முஸ்லீம்கள்) மரணித்தால் சுவனவாதிகள் என்றே இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது.
மாறாக இந்த அடிப்படைவாதிகள் உளறுவதைப்போன்று வேறு எந்த தீவிரவாதத்தையும் இஸ்லாம் மார்க்கம் போதிக்கவில்லை என்பதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் மூலம் இஸ்லாம் மனித உயிருக்கு வழங்கும் கண்ணியத்தை உணரலாம் அல்லாஹ் கூறுகிறான் ‘ஓரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவராவார்’ என்ற இப்படியான உபதேசங்களை போதிக்கும் இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதச் செயல்களை ஆரவமூட்டி ஆதரவு வழங்குமா? என்பதனை அடிப்படைவாதிகள் ஓர் நிமிடம் சிந்திக்கட்டும்.ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.