அரசுப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். மயமாக்குவதா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு. முகம்மது யூசுப் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சுதந்திர இந்தியாவில் (சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலும்கூட) நாட்டில் நடந்த வகுப்புக் கலவரம், மத மோதல்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருந்தது ராஸ்ட்ரீய சுயம் சேவக் சங் என்னும் மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். என்பது நாடறிந்த உண்மையாகும்.

உச்சபட்சமாக மகாத்மா காந்தியின் படுகொலையிலும் சம்பந்தப்பட்டது இந்த அமைப்பே. பல கால கட்டங்களில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ்.க்கே உண்டு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தால் அரசுப்பணிகளில் சேர முடியாது என்ற தடை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இதில் உறுப்பினர்களாக இருப்போர் அரசுப் பணிகளில் இணைவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற நிலையை எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் ஆபத்தானதாகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், நடுநிலையான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தலித் உட்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினர் அனைவருக்கும் அச்சுறுத்தலும் ஆகும்.

இந்த விவகாரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பையும் சேர்த்து வைத்தே மத்திய அரசு திட்டம் வகுக்கிறது. முஸ்லிம்களில் எவரும் அதுபோன்ற அமைப்புகளில் இருப்பது இல்லை என்பது தெளிவான ஒன்று. மக்கள் பணியில் ஈடுபடுவோர் மத சிந்தனையுடன் செயல்பட்டால் நாடு சுடுகாடாகிவிடும் என்பதை மத்திய அரசிற்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

காந்தியின் படுகொலையை அடுத்தே அரசுப்பணிகளில் சேர்வோர் ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினர் கிடையாது என்ற விதி அமலானது. கடந்த அறுபது ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த இந்த விதியை ஒரே நாளில் ஓரம் கட்டிட, மோடி காட்டும் வேகம் நாட்டை மயானமாக்க எடுக்கும் முடிவாகவே முஸ்லிம்களும் நடுநிலை இந்துக்களும் பார்க்கிறார்கள்.

இப்போதே மாட்டை வைத்து மனிதர்களைக் கொல்பவர்கள் நாளை இது போன்ற முடிவுகள் சட்டமானால் மதச்சார்பற்றவர்களையும், சிறுபான்மையினரையும் எவ்வித காரணமும் இன்றி அழித்திட தயங்கவே மாட்டார்கள். ஏன் எனில் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

மத்திய மோடி அரசு நாட்டை சுடுகாடாக ஆக்கும் இது போன்ற சிந்தனையை கைவிட்டுவிட்டு,
நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதே அனைவருக்கும் நல்லது என்பதைக் கூறிக் கொள்கிறோம்.

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படிக்கு

மு. முஹம்மது யூசுப்

மாநில பொதுச்செயளாலர்

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.