வெறும் மூன்றரை மணி நேரம் நோன்பு நோற்கும் ஓமான் கிராம மக்கள் உண்மை என்ன?



நேற்று முகநூலில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது அந்த செய்தி என்னவெனில்..,

ஓமானின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து 150KM தூரத்தில் அமைந்திருக்கும் வெகான் எனும் கிராமத்தில் வெறும் 3.5 மணி நேரம் நோன்பு காலமாக இருப்பதாகவும் உலகிலேயே குறைந்த நேரம் நோன்பிருக்கும் மக்கள் இங்கு வசிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சவூதி அரேபியாவின் அஜல் நாளிதழை மேற்கோள் காட்டியுமிருந்தார்கள்..

உண்மை என்னவெனில் கடல் மட்டத்திலிருந்து 2000 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம் முற்றிலும் மலைகளினால் சூழப்பெற்றது, கழுதை குதிரை போன்ற கால்நடைகளின் மூலமாகவே அதிகபட்சமாக இந்த கிராமத்தை மக்கள் அடைகிறார்கள்.

காலை 11 மணிக்கு உதயமாகும் சூரியன் 2.30 மணிக்கெல்லாம் மலைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு மறைந்துவிடுகின்றது, அதன் அர்த்தம் சூரியன் முற்றாக மறைந்து விட்டதென்று அல்ல.

ஆனால் அங்குள்ள மக்கள் ஓமானில் கடைப்பிடிக்கும் நோன்பு நேரத்தையே கடைப்பிடிக்கிறார்கள் இதனால் அங்கு 3.5  நேரம் எல்லாம் யாரும் நோன்பிருப்பதில்லை.. என ஓமானின் மத விவகார அமைச்சை மேற்கோள் காட்டி.., டைம்ஸ் ஒப் ஓமான் தெரிவித்திருக்கின்றது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.