முத்துப்பேட்டை ஆசாத்நகர் அரசு துவக்கப்பள்ளிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொருட்கள் உதவி!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே ஆசாத் நகர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மாணவர்கள் வசதிகளுக்கு பல்வேறு பொருட்கள் தேவைப்பட்டதையடுது அதனை வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு முடிவு செய்தது. இந்தநிலையில் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்ககூடிய பொருட்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத் நகர் கிளை தலைவர் ஹாஜாமைதீன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி பிர்தொவ்ஸ்கான் ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அசோகனிடம் வழங்கினார்கள.; மேலும் எந்தஒரு உதவி தேவைபட்டாலும் செய்து தருவதாக தெரிவித்தனர் இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.