முத்துப்பேட்டை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்க பரிசு வழங்கல். (படம் இணைப்பு )திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெரிய நாயகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் தேவதர்சினி, சோபிகா, ஜெகதீஷ்வரி, கண்ணிகா, அஸ்ரின் ஆகிய மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி  முகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மைநூர்தீன் தலைமை வகித்தார். தெற்குத்தெரு முன்னால் ஜமாத் தலைவர் மௌலா அபூபக்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு வெஸ்டன் யூனியன் பொதுமேலாளர் ஜெகநாதன் ஊக்க பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தெற்குத் தெரு ஜமாஅத் செயலாளர் கவிஞர் பசீர் அகம்மது, இணைச் செயலாளர் நெய்னா முகம்மது, பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக், சமூக ஆர்வளர் முகம்மது மாலிக், முகைதீன் பள்ளி ஜமாஅத் தலைவர் ராவுத்தர், வெஸ்டன் யூனியன் திருவாரூர் பொது மேலாளர் பிரபு உட்பட பலரும் பேசினர். நிகழ்ச்சியில் சோழநாடு நெய்னா முகம்மது மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

 

[gallery columns="1" size="large" ids="38521,38520"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.