முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிக்கும் இந்திய ராணுவம்....!!இந்தியா என்பது மதச்சார்பற்ற ஜனநாயக நாடு, அவரவர் மதத்தைஅவரவர் பின்பற்றிக்கொள்ளலாம் என்பதை ஏட்டளவில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

அதற்கான ஆயிரக்கணக்கான சான்றுகளில் கீழ்காணும் ஓர் செய்தியும் அடக்கம்....


கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மக்தூம் ஹுசைன் 2001 ஆம் ஆண்டு ராணுவ மருத்துவ படையில் இணைந்தார்.

அங்குள்ள அதிகாரி மத காரணங்களுக்காக மக்தூம் ஹுசைன் தாடி வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். பின்பு அனுமதி ரத்து செய்யப்பட்டு தாடியை எடுக்க வேண்டுமென மேல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

மக்தூம் ஹுசைன் தாடியை எடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதனையடுத்து மக்தூம் ஹுசேன் புனே ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் தாடியை எடுக்க உத்தரவு போடப்பட்டது. அங்கேயும் அவர் மறுத்தார். இதனால் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

முதல் கட்ட விசாரணையிலேயே அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று அறிக்கை அளிக்கப்பட்டு மக்தூம் ஹுசேன் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள ஆயுதப்படை நடுவர் மன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் தாடியை அகற்றும்படி பலமுறை உத்தரவிட்டும் மனுதாரர் பிடிவாதமாக மறுத்துள்ளார். எனவே விரும்பத்தகாத கருதப்பட்டு பணி நீக்கம் செய்தது சரியே என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராணுவத்தில் பணிப்புரியும் சீக்கியர்கள் தாடி வைத்து, தலைப்பாகை அணிந்து தங்களுடைய மத அடையாளத்துடன் பணிப்புரியும்போது முஸ்லிம்கள் மட்டும் தங்களுடைய மத அடையாளத்துடன் பணிப்புரிய அனுமதி மறுப்பது ஏன் ?

ராணுவ உயரதிகாரிகளிடம் முஸ்லிம் விரோத போக்கு குடிகொண்டு இருப்பதை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.