குடிநீர்த்திட்டம் பயனளிக்கவில்லை முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வழியுறுத்தல்.குடிநீர்த்திட்டம் பயனளிக்கவில்லை இது குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வழியுறுத்தல்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் கோ.அருணாச்சலம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் செந்தில், துணைத்தலைவர் அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய அனைத்து கவுன்சிலர்களும் மருதங்காவெளி பகுதியில் குடிநீர் இணைப்புக்காக கூடுதல் தொகை செலவழிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். இதில் குடிநீர் திட்டப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 14 லட்சம். இதில் பணிகள் முடிவடைந்தநிலையில் கூடுதலாக 1.50லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு விபரங்கள் வழங்கப்படவேண்டும். வார்டுகள் 1,17,18 ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காகவே இத்தனை லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 17-வது வார்டு பகுதிக்கு குடிநீர்த்திட்டம் பயனளிக்கவில்லை. எனவே திட்டப் பணிகள் குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென கவுன்சிலர்கள் காரச்சாரமான விவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் மெட்ரோ மாலிக் பேசுகையில்: கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் சீரமைக்கப்படாததால் முத்துப்பேட்டை முழுவதும் இருட்டாக காட்சி அளிக்கிறது. உடனடியாக மின்சாரப்பொருட்கள் வாங்கி சரி செய்ய வேண்டும். விரைவில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பேரூராட்சி சங்கை சீரமைத்து நோன்பு வைக்கும் மற்றும் திறக்கும் நேரத்திலும் ஒளிக்க வேண்டும் என்றார். தி.மு.க கவுன்சிலர் ஜெகபருல்லா பேசுகையில்: பேரூராட்சி நிதியில் 50 லட்சம் இருப்பதாக nதிரிவிக்கப்பட்டது. அதனை அனைத்து பகுதிக்கும் நிதி ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க கவுன்சிசலர் மாரிமுத்து பேசுகையில்: எனது பகுதியில் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், நாசர், பாவாபகுருதீன், செந்தில்குமார், ரெத்தினக்குமார், கிருஷ்ணன், ஜெய்புனிஷா பகுருதீன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்துக் கொண்டனர்

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.