இந்திய தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு: கத்தார் நாட்டில் பிரதமர் உறுதிகத்தார் நாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

கத்தார் தலைநகர் doha -வில் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கத்தார் நாட்டு தலைவர் Sheikh Tamim bin Hamad Al-Thani - யிடம் இது குறித்து பேச உள்ளதாக இந்திய தொழிலாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களுடன் 30 நிமிடங்கள் பேசிய பிரதமர் பின்னர் அவர்களில் சிலருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார். இதன் பின் தொழிலாளர்களுடன் அவர் உணவருந்தினார். கத்தார் நாட்டில் 6 லட்சத்து 30 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் கத்தார் நாட்டுடன் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு தலைவர் Sheikh

Tamim bin Hamad Al-Thani - யுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளார். முன்னதாக தோஹா சென்றடைந்த மோடியை கத்தார் பிரதமர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.