முரட்டு மௌனத்தை மோடி எப்போது கலைப்பார்? இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்முரட்டு மௌனத்தை மோடி எப்போது கலைப்பார்? இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் கேள்வி
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில்விஸ்வ‬ ஹிந்து பரிஷத் தலைவர் ‪

சாத்வி‬ பிராச்சி உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கி நகரில், நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற, சாத்வி முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை விரைவில் உருவாக்குவோம் என்று வாந்திஎடுத்துள்ளார். இந்த பேச்சை இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கின்றது. இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயக அமைதிக்கும் எதிரானது.
மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்த பின்பு பீகார்,டெல்லி,தமிழ்நாடு,கேரளா,மேற்குவங்கம்,புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்,விஹெஜ்பி,பிஜேபி,போன்ற சங்கப்பரிவாரங்களை மக்கள் சவுக்கடி கொடுத்து துரத்தி பாசிசம் இல்லாத தூய்மையான மாநிலங்களாக மாற்றியது மறந்து விட்டதா?இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ்,விஹெஜ்பி,பிஜேபி,போன்ற சங்கப்பரிவாரங்கள் இல்லாத இந்தியாவை வெகுவிரைவில் மக்கள் உருவாக்கிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.
தொடர்ந்து இது போன்ற விஷமக்கருத்துக்களை பிஜேபியும் அதன் வைகையராக்களும் பேசி வருகின்றார்கள் இதனை கண்டிக்கவேண்டிய மோடியோ தொடர்ந்து முரட்டு மௌனம் காப்பது ஏன்? மோடியின் இரண்டு வருட சாதனையான தொடர் சுற்றுலா நாயகன் தனது பயணத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுகின்ற மோடி இதுபோன்ற தீவிரவாதத்தை தூண்டும் பேச்சுகளுக்கு தனது மௌனத்தின் மூலம் ஆதரவு தெரிவிப்பது சரியா? விஷமக்கருத்தை பேசிய சாத்விக்கு தகுந்த தண்டனை வழங்கி இந்தியாவின் இறையாண்மையும், ஜனநாயக தேசத்தில் அமைதியையும் நிலைநாட்டிட வேண்டும் இல்லையனில் பிஜேபியும் அதன் வைகையராக்களையும் இந்தியாவை விட்டு மக்கள் சாட்டையடி கொடுத்து துரத்தும் படலம் தொடரும். இவ்வாறு தனது அறிக்கையில் கூறினார்.
இப்படிக்கு:
மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி
மாநில செய்தி தொடர்பாளர்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
தமிழ் நாடு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.