முஸ்லிம் பெண் போலீசார் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட அனுமதி அளித்துள்ளதுஸ்காட்லாந்து காவல் துறை



ஸ்காட்லாந்தில் முஸ்லிம் பெண் போலீசார் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது ஸ்காட்லாந்து காவல் துறை

அல்ஹம்துலில்லாஹ்...

குற்றச் செயல்களை பிடிப்பதில் உலகப்புகழ் பெற்றது ஸ்காட்லாந்தின் போலிஸ் என்பது அறிந்ததே..


இந்நிலையில் இங்கு முஸ்லிம் பெண்கள் போலிஸ் தொழிலில் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கென ஹிஜாப் ஒன்றை அறிமுகப்படுத்த ஸ்காட்லாந்து போலிஸார் தீர்மானித்துள்ளனர்.

தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகள் மறைக்கப்படும் அதே வேளை, முகத்தினை மறைக்காது குறித்த ஹிஜாப்பினை அணியும் வகையிலான விதத்தில், பெண் போலிஸாருக்கான ஹிஜாப் தயாரிக்கப்பட வேண்டும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம், கறுப்பின மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த பெண்களை அதிகளவில் போலிஸ் படையில் இணைத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு போலிஸ் பணியில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமாயின் அவர்கள் சிரேஷ்ட அதிகாரியின் உத்தரவை பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெண் போலிஸாருக்கான ஹிஜாப் தயாரிக்கப்பட வேண்டும் என போலிஸாரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.