இளம் வயதுலயே கோடீஸ்வரி ஆனார் மலாலா!தலையில் சுடப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தான் பெண் மலாலா, தனது அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக கோடீஸ்வரராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 வயதாகும் மலாலா, பிரிட்டனில் வசித்து வருகிறார்.
பெண் கல்வி குறித்து அவர் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து "ஐ யாம் மலாலா' என்ற புத்தகத்தை அவர் எழுதினார்.
அவரது வாழ்க்கை வரலாற்று பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2015 லட்சம் பவுண்டாக (சுமார் ரூ.15 கோடி) இருந்தது.
மேலும் அது 11 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.7.4 கோடி) லாபம் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.
மலாலாவின் புத்தகங்கள், சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமைத் தொகை செலுத்துவதன் மூலம் அந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.
மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.