முத்துப்பேட்டையில் அதிமுக நகர அவைத் தலைவர் கோவிந்தராசின் அராஜக செயல் - மக்கள்கொந்தளிப்புமுத்துப்பேட்டையில் குடியிருப்பு பகுதியின் நடுவே தனியார் காலனி வீடுகளின்  கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குக்காடு ஆதிதிராவிடத்தெரு பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகிறது. இதன் நடுவே அதிமுக நகர அவைத் தலைவராக இருக்கும் கோவிந்தராஜ் என்பவரது காலனி வீடுகள் உள்ளன. இதில் 11 வாடகை வீடு, 3 கடைகள் உள்ளன. இதற்கு பேரூராட்சி சார்பில் முறையான அனுமதியும் கழிவுநீர் வடிகால் வசதியும் பெறாததால் அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர், செப்டிக்டேங்க் கழிவுகளும் இதன் அருகே உள்ள காலி இடத்தில் குளம்போல் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது.

2006ம் ஆண்டு இந்த காலனி வீடுகள் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி அசுத்தமான நிலையில் தொற்றுநோயை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட இப்பகுதியில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டன. தற்போது கழிவுநீர் அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் விதமாக கழிவுநீர் தேங்கி நிற்பதை தடை செய்து முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பச்சையம்மாள் கூறுகையில், இந்த கழிவுநீரால் 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனது மூக்குத்தியை அடமானம் வைத்து விட்டு எனது கணவரை திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க 2013ம் ஆண்டு அனுப்பி வைத்தேன். எந்த பலனும் இல்லை.

முத்துப்பேட்டைக்கு வந்த கலெக்டரை பலமுறை சந்திக்க சென்றோம். அதிகாரிகள் தடுத்துவிட்டனர். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதிக்கு வந்து போராடுவோம் என்றார். அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் கூறுகையில்: இந்த அதிமுக பிரமுகரின் காலனி வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதன்மூலம் தொற்றுநோய் ஏற்படும். இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.Thanks To: Dinakaran

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.