முத்துப்பேட்டை பகுதியில் வாழைப்பழங்கள் பயங்கர விலை ஏற்றம்முத்துப்பேட்டை பகுதியில் ஒரு பூவன் வாழைப்பழம் ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவாரூர்  மாவட்டம் முத்துப்பேட்டையில் பூவன் வாழைப்பழம் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது. ஒரு தார் ரூ.500 முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது.  அதேபோல் கடைகளில் ஒருa பழம் ரூ.5 முதல் ரூ.6 வரை விற்கப்படுகிறது. 10  எண்ணிக்கை கொண்ட ஒரு சீப்பு ரூ.50 முதல் விற்கப்படுகிறது. இதனால்  பொதுமக்கள் பூஜை மற்றும் விசேஷங்களுக்கும், தங்களின் தேவைகளுக்கும் குறைந்த  எண்ணிக்கையிலேயே பழங்களை வாங்கி செல்கின்றனர். முத்துப்பேட்டை கடைகளில்  குறைந்த எண்ணிக்கையிலேயே பூவன் வாழை தார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள.

இதுகுறித்து பழக்கடை உரிமையாளர் பாலகுமார் கூறுகையில், இப்பகுதிக்கு அறந்தாங்கி,  பேராவூரணி, ஆவணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பூவன் வாழைப்பழங்கள்  விற்பனைக்கு வருகின்றன. தற்போது அப்பகுதியில் உற்பத்தி குறைந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்துவிட்டது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.