அல் மஹா அரபிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த எழுத்தாளர் விருதுஅதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'அதிரை நியூஸ் கல்வி - சாதனையாளர்கள் விருது 2016' வழங்கும் விழா 03-06-2016 வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவில் அல் மஹா அரபிக் கல்லூரி முதல்வர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளர் விருதினை திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் முனைவர் எம்.எம் சாகுல் ஹமீது அவர்கள் பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


மாணவப்பருவத்திலேயே கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர். கல்கத்தா தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதி இதயம் என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.

மஸ்கட், குவைத், துபாய் போன்ற அரபு நாடுகளில் நிதித்துறையில் கணக்காளராகவும் ஆண்டுகள் மனித வள மேம்பாட்டுத்துறையிலும் பல ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்பு வகித்த அனுபவம் மிக்கவர். ஆப்ரிக்கா உட்பட்ட பல நாடுகளுக்கு நிறுவன வேலைகளாக சென்று வந்தவர்.
அதிரை நிருபர், அதிரை நியூஸ் போன்ற அதிரையின் வலைதளங்களில் பல்வேறு தலைப்புகளில் அரசியல் , பொருளாதார, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதியவர். பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுடன் இணைந்து மீத்தேன் வாயுத் திட்டம் பற்றிய ஆபத்துக்களை அதிரை நியூசில் ஐந்துவாரங்கள் தொடராக எழுதியவர். இவரது கட்டுரைகளை நீடுர், கடைய நல்லூர், பரங்கிப் பேட்டை, திருப்பந்துருத்தி, இளையாங்குடி ஆகிய ஊர்களில் இயங்கும் வலைதளங்கள் வெளியிட்டு இருக்கின்றன.

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா? மற்றும் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு ஆகிய நூல்களை எழுதி இருக்கிறார். மேலும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் என்ற நூலை வெளியிட இருக்கிறார். பாலஸ்தீன வரலாறு, அழைப்புப்பணி, மதமாற்றமல்ல போன்ற நூல்களையும் தொடர்ந்து வெளியிட இருக்கிறார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.