பதன்கோட் தாக்குதலை நடத்தியது யார்? அரசின் நாடகம?..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சரத்குமாரின் பேட்டியை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாக என்ஐஏ மறுத்துள்ளது. என்ஐஏ மறுத்தாலும் இதை அப்படி நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத்தை சேர்ந்த 7 வீரர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் ஜெய்ஷ்- இ- முகம்மது தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இதைத் தொடந்து கடந்த மே மாதம் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் இருந்து 12 பேரை தீவிரவாதிகள் என சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இதுவரை அந்த 12 பேர் யார்யார் என எந்தத் தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. அவர்கள் ஊடகங்களுக்குக் கொடுத்த ஒரே தகவல் இந்த 12 பேரும் அமைதியாக இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதுதான்.


இப்போது என்ஐஏ தலைவர் சரத்குமார் இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்- இ- முகம்மது ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அப்படி என்றால் கைது செய்யப்பட்ட அந்த 12 நபர்கள் யார்? அவர்கள் அமைதியாக இருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்துபவர்கள் என்று சிறப்பு காவல்துறையினர் கூறினார்கள் அல்லவா? அப்படி இதுவரை அவர்கள் வேறு எங்கெங்கு பயங்கரவாத தாக்குதலை நடத்தி உள்ளனர் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக மோடி அரசு அவ்வாறு அறிவிக்காது. அவர்களது நோக்கமே இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மீது தீவிரவாத முத்திரைகுத்தி தனிமைபடுத்த வேண்டும் என்பதுதான். அதற்காக திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன.
செ.கார்கி

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.