மதநல்லிணக்க குழுவால் பாஜகவின் உண்மை அறியும் குழு விரட்டியடிப்பு! - கைரானா பிரச்சனை!உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கைரானா நகரில் வாழும் இந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அதனால் அவர்களில் சுமார் 346 குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டதாகவும் பா.ஜ.க. எம்.பி ஹுக்கும் சிங் என்பவர் பட்டியல் வெளியிட்டிருந்தார்.


சமீபத்தில் உ.பி. அலகாபாத்தில் நடைபெற்ற பாஜவின் தேசிய செயற்குழுவிலும் இதுகுறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பிரச்சாரமும் இதன்மூலம் முடுக்கிவிடப்பட்டது. பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறும்போதும் உத்தரபிரதேசத்தில் இந்துக்கள் அச்சத்தோடு வாழ்கின்றனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கைரானாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி 300 க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் ஊரை காலி செய்துவிட்டனர். உத்தர பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சிதான் நடக்கிறது என குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்திற்காக மதவாத அரசியலை கையில் எடுத்துள்ளது, பா.ஜ.க கூறுவது போல மது மோதல்களால் கைரானாவிலிருந்து எந்த ஒரு குடும்பமும் வெளியேறவில்லை. வேலை வாய்பிற்காக சில குடும்பங்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக மத மோதலை தூண்டுகிறது பா.ஜ.க என சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியது.

Hairanaஇந்த விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி ஆதாரம் இன்றி அவதூறு பேசுவதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியதையடுத்து, பா.ஜ.க சார்பில் 9 பேர் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக எம்.பி ஹுக்கும் சிங் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்த பலர் தொடர்ந்து அந்த ஊரிலேயே வசிப்பதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் கைரானாவில் வாழும் இந்து குடும்பங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் பாஜகவின் உண்மை அறியும் குழுவினர் இன்று கைரானா சென்றடைந்தனர். அங்கு பா.ஜ.கவின் எம்.பி ஹூக்கும் சிங்கின் பண்ணை வீட்டில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு உள்ளுர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்து மதத் தலைவர்கள், இஸ்லாமிய தலைவர்கள் இணைந்து பேரணியாக சென்று பா.ஜ.க. குழுவை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்வதாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனையாலும், சொந்த பிரச்சனைகளாலும் சில இந்துக் குடும்பங்கள் அந்த ஊரில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், பா.ஜ.க. இதனை மதப் பிரச்சனையாக்குகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே முஸ்ஃபர் நகர், லவ் ஜிஹாத், தாத்ரி, கர்வாப்ஸி, மாட்டிறைச்சி போன்ற பல்வேறு சம்பவங்கள் அங்கு நிகழ்ந்துள்ள வேளையில், கைரானா பிரச்சாரம் எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டே பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


 


Thanks To:  NEWINDIA

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.