நெஞ்சை உலுக்கிய விபத்து.....!!



நெஞ்சை உலுக்கிய விபத்து.....!!

கீழக்கரையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழந்து விட்டனர்.


பெயர் விபரம்

செய்யது இப்ராஹீம்,
அப்துல் ரஹ்மான்,
ஃபாஹீத்,
ராசீக்
ஆகியோர் ஏர்வாடி சாலையில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு சகோதரர்களும் உயிரிழந்து விட்டனர்.

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)

இந்த சம்பவம் கீழக்கரை மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களுக்காக புனித ரமலானுடைய மாதத்தில் இருக்கும் நாம் அனைவரும் துஆ செய்வோமாக.


 

கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்

தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்

மித வேகம் மிக நன்று

சமூக அக்கறையுடன்-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.