குவைத் உயர்தர பரீட்சையில் சாதணை பெற்ற இலங்கை முஸ்லிம் மாணவர்கள் (படங்கள் இணைப்பு)குவைத் உயர்தர பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்று இலங்கை முஸ்லிம் மாணவர்கள் சாதனை
“2015-2016 ஆம் கல்வியாண்டுக்கான குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப் பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவர்கள்
சாதனை படைத்து தனது தாய் நாட்டுக்கும் ,குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் .குவைத்தில் படிக்கும் இலங்கை மாணவர்கள் இதுவரை பெற்றுக்கொண்ட அதி கூடிய புள்ளிகள் இதுவாகும். குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த முஹம்மத் ஸஜாத் ஷம்சுல் ஆப்தீன் (வலது) 98.98% புள்ளிகளைப் பெற்று குவைத்தில் 7 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட மாணவ நட்சத்திரங்களாவர். இவர்களை கௌரவத்துக்குரிய கல்வி உயர் கல்வி அமைச்சர் கலாநிதி பத்ர் ஹமத் அல் -ஈஸா (2 ஆவது வலம்) அவர்கள் பாராட்டி கௌரவித்தார்கள்.

இதேபோல் 2015 ஆம் ஆண்டுக்கான தேர்வில் வாழைச்சேனை யைச் சேர்ந்த ரஷாத் தாஹிர் 92.80%புள்ளிகளையும் நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த முஹம்மத் ஹஸன் இப்னு அப்பாஸ் 92.50% புள்ளிகளையும் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொண்டனர்
குவைத் உயர் கல்வி அமைச்சின் கீழ் கடந்த பல தசாப்தமாக இயங்கி வரும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் சிறப்பான முறையில் சித்தி எய்து தமது கலை மானி ,முதுமானி பட்டங்களை முடித்துவிட்டு குவைத்திலும் வெளி நாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

இவர்களது ஒளிமயமான எதிர் காலத்துக்கு தமது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் பெரு மகிழ்ச்சி அடைகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.