பாமினி ஆற்றில் குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குப்பைகளுடன் வந்த பேரூராட்சி டிராக்டர் சிறை பிடிப்பு. பரபரப்பு.முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் சேரிக்கப்படும் குப்பைகளை சில ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பாமினியாற்று கரையோரம் கொட்டி வந்தனர். தற்பொழுது சமீபக்காலமாக பேரூராட்சிக்குட்பட்ட மற்ற பகுதிகளிலிருந்தும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேகரித்துக் டிராக்டரில் கொண்டு வந்தும் பேட்டை பாமினியாற்று கரையோரம் கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் குப்பை கிடங்கு போல் ஆற்றுக்குள் குப்பைகள் மழைப்போல் குவிந்துள்ளன. இதனால் ஆற்றுத்தண்ணீர் வீணாகி வருவதுடன் அப்பகுதியில் நாற்றம் மணம் வீசத் தொடங்கியது. இதனையடுத்து பேட்டை கிராமமக்கள் இப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகளவில் டிராக்டர்கள் கொட்டிவந்தது. இதனால் அதிர்ப்தி அடைந்த அப்பகுதி மக்கள் முன்னால் பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், சுப்பிரமணியன் மற்றும் கேசவன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை பேட்டை பூங்கா அருகே குப்பை எடுத்து வரப்பட்ட பேரூராட்சி டிராக்டரை வழி மறைத்து சிறைப்பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் சேவியர், பேரூராட்சி சுகாதார பணியாளர் வீரமணி ஆகியோர் சிறைப்பிடித்த மக்களிடம் இனிமேல் அப்பகுதியில் குப்பைகள் கொட்டமாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட டிராக்டர் விடிவிக்கப்பட்டது.

 

13490634_515675571963409_8048439976949512855_o

 

படம் செய்தி:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பாமினி ஆற்று கரையோரம் பேரூராட்சி டிராக்டரில் குப்பைகள் கொட்டும் காட்சி.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.