நாச்சிக்குளத்தில் பழுதடைந்த மின் கம்பம். விபத்து நடப்பதற்கு முன் மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை.முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் அபாயத்தில் மின் கம்பம். மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் தெற்குத்தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் செல்லும் உயர மின் அழுத்த கம்பியின் மின் கம்பம் ஒன்று அடிப்பகுதி இற்றுபோய் பொழிவிழந்து எந்த நேரத்திலும் விழுந்து சாயும் அபாயத்தில் உள்ளன. இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றிதர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக திருத்துறைப்பூண்டி மின்சார வாரியத்திடம் கோரிக்ளை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த பலனும் இல்லை. தற்பொழுது இப்பகுதியில் பலமான காற்று வீசுவதால் மின்கம்பம் எந்த நேரமும் காற்றுக்கு ஆடிக்கொண்டே இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை மின்சார வாரியம் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு புதிய மின்கம்பம் உடனடியான மாற்றி தர வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பி.வி.பாரதி(படம்) கூறுகையில் நாச்சிக்குளம் தெற்க்கு தெருவில் மின்கம்பம் பல ஆண்டுகளாக மண் அரிப்பு காரணாமாக முழுமையாக சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால் இதை பல அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களும் சமூக சேவகர்களும் பொதுமக்களும் கூறியும் திருத்துறைப்பூண்டி உதவி இளம் மின் பொறியாளரிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் நடை பாதையாகவும் மற்றும் ஆடு, மாடுகள் விவசாய நிலங்களாக இருப்பதால் எந்த வித உயிர் சேதமின்றி உடனடியாக மின் கம்பத்தை மாற்றி தரவேண்டும் காலதாமதம் ஏற்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என்றார்.


மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.