குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு
குத்துச்சண்டையின் ஜாம்பவான் எனப் போற்றப்படும் முகமது அலி காலமானார். அவருக்கு வயது 74.
அமெரிக்காவின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். முகமது அலி மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 1980-ல் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாசம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் அவரை அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகமது அலிக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்த பார்கின்சன்ஸ் சிறப்பு மருத்துவர் ஆப்ரகாம் லிபர்மென், அலியின் உடல் நிலை தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டார். இந்நிலையில், அவரது உயிர் இன்று (சனிக்கிழமை) பிரிந்தது.
தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னராக வலம் வந்தர் முகமது அலி. அவர் தனது இளமை காலங்களில் 61 போட்டிகளில் 56 வெற்றிகளை குவித்தார்.
மேலும் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை எதிர்கொண்டார்.
1981-ல் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன்பின்னர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

1960ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ‘லைட் ஹெவி வெயிட்’ பிரிவில் முகமது அலி தங்கப் பதக்கம் பெறுகிறார்.. எந்த நாட்டின் சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்றாரோ அந்த நாட்டின் உணவு விடுதியில்,காப்பி அருந்த செல்கிறார்..“நாங்கள் கறுப்பின மக்களுக்கு எதுவும் தருவதில்லை” என அங்கு பணியில் இருந்த பெண்மணி பதில் சொல்கிறார். (அன்று..? அமெரிக்காவில் கறுப்பர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. ஹோட்டல்களில் சாப்பிடக் கூட கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது.)இனவெறியின் உக்கிரத்தால், வெறுப்படைந்த முகமது அலி தனது ஒலிம்பிக் பதக்கத்தை "ஓகியோ" நதியில் வீசியெறிகிறார். “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை நான் அணிய விரும்பவில்லை” என்று பின்னாளில் முகமது அலி தனது சுய சரிதையில் எழுதுகிறார்.. "ஓகியோ" நதியின் அடியழத்தில் அழுந்தி கிடக்கும் அந்த பதக்கத்தின் சுவடுகள், மீட்டும் இனவெறி எதிர்பிற்கான கனத்த சோகத்தை உங்களால் உள்வாங்க முடிதலே "அலிக்கான அஞ்சலி".. ..

Mohamed Ali 02
Mohamed Ali 06 Muhammad_Ali_receives_14_January_the_thanks_o-m-16_1439325059495 MGR
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.