முத்துப்பேட்டை அருகே கார் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடியில் கார் மோதியதில் பைக்கில் வேலைக்கு சென்ற இளைஞர் சாவு!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கார் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் கீழவாழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் கார்த்திக்(26). கட்டுமானப்பணி கம்பி கட்டும் தொழிலாளியான இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முருகையனும் கட்டுமானப்பணி தொடர்பாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் பைக்குகளில் தனித்தனியே சென்று கொண்டிருந்தனர். இருவரும் கள்ளிக்குடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிரே வந்த ஆட்டின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, திருப்பியபோது, முன்னாள் சென்ற கார்த்திக் பைக் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன், சப்.இன்ஸ்பெக்டர் அசோகன், தலைமை காவலர் பாஸ்கர் உட்பட போலீசார் கார்த்திக்கின் சடலத்தை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து நடந்ததும் தப்பியோடிய கார் டிரைவர் கொறுக்கை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனை தேடி வருகின்றனர்

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.