மார்கத்தை அறிய கூச்சம் ஏன்! அவசியம் படிக்கவேண்டியது !!மலத்துவாரத்தின் வழி உடலுறவு கொள்வதை இஸ்லாம் வண்மையாக கண்டித்து தடை செய்கிறது.
யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவூத் 1847, அஹ்மத் 3356
யார் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதீ 1086
ஈமானிய பலஹீனமுள்ள இன்றைய தலைமுறையினர் பலியாடுகளை போல, மிருகங்களை போல உடலுறவு கொள்ளும் நீல ஏ படங்களை பார்த்து அதுபோல சொந்த வாழ்விலும் நடைமுறைப் படுத்திப் பார்க்கும் அசிங்கமான முயற்சியில் இறங்குகிறார்கள் இறையச்சமற்று.ஆபாசப் படம் பார்ப்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்கிற சிந்தனை மரத்து விட்டதின் பின்விளைவு இது
பலர் உணருவது போல அந்தப் படங்களில் இருவர் “உண்மையில்’ உறவு கொள்வதில்லை; நடிக்கவே செய்கிறார்கள். அதன் பின்னே பலரது சோடனைத் திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது.
யதார்த்தமான ஒரு உடலுறவில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை! டபிள்யூ. டபிள்யூ. எஃப் (WWE) மாமிச மலைகளின் மல்யுத்தக் காட்சிகள் தொடங்குமுன், “”இது எங்கள் தொழில்முறை வீரர்களின் அதி உயர் பயிற்சியினால் நடத்தப்படும் சண்டைக் காட்சிகள். இதைப் பார்த்துச் சண்டை போடுவது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கை வெளியிடுகிறார்கள்; படுக்கைக் காட்சிகளுக்கு அப்படிப் போடுவதில்லை – அவ்வளவுதான்.
வாழ்க்கை துணையினர் இருவர் உடலுறவு கொள்ளும் போது இருவருக்கும் திருப்தி ஏற்பட்டு சுகம் ஏற்பட வேண்டும் ஒருவருக்கு சுகம் மற்றவருக்கு வேதனை ஏற்படுத்தக் கூடாது மலப் பாதையில் உடலுறவு கொள்வது ஒருவருக்கு வேதனை ஏற்படுத்தும் இயற்கைக்கு முரணான அசிங்கமான செயல்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.