இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய ஐந்து போர்கள்!உள்நாட்டு போர்களில் ஏற்பட்ட மாற்றங்கள் முகலாய சாம்ராஜ்யம், மராட்டிய சாம்ராஜ்யம், ஆப்கானியர்களின் வருகை என எங்கோ எப்போதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களும் கூட இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுத காரணியாக இருந்திருக்கிறது.

உலகை ஆண்ட மண், பிரிட்டிஷ் முன் பணிந்து அடிமையாக ஆளானதும் சில வரலாற்று போர்களின் காரணங்களால் தான். இந்தியாவை ஆள்வதை கனவாக கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி, பிறகு அவர்கள் வீழ்த்திய சாம்ராஜ்யங்கள் என இந்திய வரலாற்றை மாற்றிய ஐந்து போர்களை பற்றி இனிக் காணலாம்…

இரண்டாம் தரைன் போர் (Second War of Tarain)
தரைன் எனும் பகுதியில் 1192 ஆண்டு டெல்லி ராஜா பிரிதிவிராஜ் சௌஹன் மற்றும் கோரியின் சுல்தான், முஹம்மது கோரி மத்தியில் இந்த போர் நடந்தது. கோரி இந்தியா முழுவதும் மூன்று தசாப்தங்களாக போரெடுத்து சூறையாடி வந்தார். 1191-ம் ஆண்டு பிரிதிவிராஜ்-வுடன் சவால்விட்டு தரைன் முதலாம் போர் நடந்தது. இதில், கோரி தோல்வியடைந்தார்.

வரலாற்று புத்தகங்களில் இந்த தோல்விக்கு பிறகு கோரி ஆப்கானிஸ்தான் திரும்பியதாகவும், மீண்டும் 1192-ம் ஆண்டு மீண்டும் சௌஹன்-வுடன் போரிட பெரிய இராணுவத்துடன் வந்ததாகவும் கூறப்படுகிறது. இம்முறை. ராஜ்புட் அரசும், சௌஹன் அரசும் ஒன்றிணையாது போர் தொடுத்தனர். இதன் காரணமாக சௌஹன் அரசு மாபெரும் தோல்வியை தழுவியது. டெல்லியில் கடைசி இந்து மன்னர் டெல்லி அரியணையை இழந்தார்.
இதனால் இந்தியாவில் இஸ்லாமிய அரசு நிலைபெற முடிந்தது. இதற்கு முன் இந்தியாவில் போரிட வந்த இஸ்லாமியர்கள் சூறையாடி சென்றதாக தான் குறிப்புக்கள் இருந்தன. கோரி தான் ஓர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி ஆளுமை செய்தார். இவர் குதுப்-உத்-தின் ஐபக்-கை விட்டு சென்றார். இவர் தான் பின்னலில் டெல்லியில் குதுப் மினார் கட்டினார், ஆளுநராகவும் திகழ்ந்தார்.

முதலாம் பானிபட் போர்
முதலாம் பானிபட் போர், ஃபர்கானாவில் இருந்து போரிட வந்த பாபர் மற்றும் டெல்லியின் சுல்தான் இப்ராஹீம் லோதி மத்தியில் கடந்த 1526-ம் ஆண்டு நடந்தது. வரலாற்று புத்தகங்களில் பாபர், லோதியின் சகோதரனை தான் தாக்க இந்தியா வந்ததாக சில கூற்றுகள் இருக்கின்றன.
சுல்தானை தோற்கடித்த பாபர் இந்தியாவின் அழகு மற்றும் இரம்மியமான தோற்றம் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். இவர் தான் முகலாய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். பிறகு 1527-ம் ஆண்டு ரானா சந்காவை கான்வா போரில் தோற்கடித்தார்.
1556-ம் ஆண்டு நடந்த இரண்டாம் பானிபட் போரில் தான் முகலாய பேரரசு தனது வலிமையை உறுதிப்படுத்தியது. அக்பர் ஹீமுவை தோற்கடித்தார்.
பிளாசிப் போர்
இந்த போர் தான் பிரிட்டிஷ்காரர்களை ஜாட்கள், மாராட்டியர்களுடன் ஓர் போட்டியாளர்களாக உருவாக வைத்தது. இந்த போர் 1757-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் நாள் பெங்கால் நவாப் சிராஜ் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் நடந்தது.
நவாப்பின் ஒப்புதல் பெறாமல் கொல்கத்தாவில் பிரிட்டிஷ்காரர்கள் கோட்டை வில்லியம் அரண் கோட்டை கட்டியது பெரும் அழுத்தங்கள் உண்டாக காரணியாக இருந்தது. இதனால் பொறுமையிழந்த நவாப், பிரிட்டிஷின் குறுக்கீடு தன் ஆட்சியை கெடுப்பதாக கருதி, அரனை அழித்தார்.
ஆனால், உடனே மதராஸ் மாகாணத்தில் இருந்து உதவி பெற்று, நவாப்பின் இராணுவத்தை விட பெரிய இராணுவத்தை அமைத்தார்.இந்த போரில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும் கனவிற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.
மூன்றாம் பானிபட் போர்
இந்த போர் மராட்டியர்கள் மற்றும் ஆப்கானில் இருந்து போரிட வந்த அகமது ஷா அப்தாலி மத்தியில் நடந்தது. இப்போர் 1761-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 14-ம் நாள் நடந்தது. இந்தியாவில் நடந்த கடுமையான போர்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.
அப்தாலிக்குக் எதிராக தனது இராணுவத்தின் பெரும் பகுதியை பேஷ்வாவின் சகோதரர் சதாசிவ ராவ் இழந்தார். வரலாற்று புத்தகங்கள் மூலம், மராட்டியர்களின் வீழ்ச்சி மற்ற பிராந்திய மன்னர்களிடம் இருந்து கிடைக்காத உதவியினால் தான் நடந்தது என அறியப்படுகிறது.
அவர்களது தலைநகரான புனேவில் இருந்து பல மைல்கள் தூரம் கடந்து இந்த போர் நடந்ததால், வீரர்கள் மிகவும் சோர்வுற்றனர். இதனால் ஆப்கானியர்கள் எளிமையாக மராட்டியர்களை வீழ்த்தினர். இந்த வீழ்ச்சி தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் நுழைய நுழைவுவாயிலாக இருந்தது. இதன் பிறகு பிரிட்டிஷ் முன்னெடுத்து 1818-ம் ஆண்டு ஆங்கிலேயே – மராட்டிய போரில் மொத்த மராட்டிய சாம்ராஜ்யத்தையும் அழித்தது.
பக்சர் போர்
பக்சர் போர் 1764-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் நாள் பக்சர் எனுமிடத்தில் நடந்தது. பாட்னாவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ்-க்கும் முகலாய, நவாப் ஒன்றிணைந்த படைகளுக்கும் மத்தியில் நடந்த போர் தான் இது.
இந்தியா பக்கம் 40,000 வீரர்கள் இருப்பினும், ஆங்கிலேயே படை பீரங்கி கொண்டு போர் இட்டதால். தோல்வியை தழுவ வேண்டிய சூழல் உண்டானது. இதில் முகலாய அரசு தான் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த போரில் அடைந்த வெற்றி பிரிட்டிஷ்க்கு பெரிய பலத்தை உருவாக்கியது.
இதன் பிறகு 1857-ம் ஆண்டு வரை எழுந்த அனைத்து கிளர்ச்சிகளையும் பிரிட்டிஷ் தோற்கடித்தது. மராட்டியர்கள், சுல்தான்கள் என அனைவரும் பிரிட்டிஷ்-யிடம் தோற்ற பிறகு இந்தியா முழுவதுமாக இவர்களது ஆட்சிக்கு அடியில் உருவானது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.