நானா நோலிமிட் பேக் ஒன்னு இருந்தா தாங்களே கண்ணீர் சிந்தும் உண்மைச் சம்பவம்



ரமழான் இறுதிக் கட்டம், தெஹிவளை சூழல் காலையிலிருந்தே பிச்சைக்காரர்கள் தொல்லை. ஒவ்வோர் அரை மணிக்கொருமுறையும் கோலிங் பெல் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. வயதானவர்கள், வாலிபர்கள் என மாறி மாறி எல்லா வர்க்கத்தினரும் ஹதியாக்காக வந்துகொண்டிருந்தனர்

பொதுவாக நான் ஹதியாக் கேட்டு வருவதையோ அவர்களுக்கு வாரிக் கொடுப்பதையோ பெரிதாக வரவேற்பதில்லை. காரணம் நோன்பு பிச்சைக்காரர்களது ஷீசனாக மாறியுள்ளது. இன்னும் இது பணமீட்டும் ஒரு சாதுரியமாகவும் ஆகியுள்ளது.

இதே பானியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஹதியாக்காக காந்திருந்தாள். அவளைக் கண்டதும் வீசுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்த எனது பெரிய ராத்தாவின் பிள்ளைகளின் பழைய உடுப்புப் பொட்டலம் ஞாபகத்துக்கு வந்தது.

ஹதியா கேட்டு வந்தவரிடம் தாத்தா, சின்ன புள்ள பழைய உடுப்பு ஈக்கி வேணுமென்டா என்று அப்பொட்டலத்தை காட்டினேன்.
கிழிந்தது, பாவிக்க முடியாமல் பழுதானது, இறுக்கமானதால் ஒதுக்கப்பட்டது என எல்லாமே அப்பொட்டலத்திலிருந்தது. அவளும் அவள் பிள்ளைகளுக்கு பொருந்தக்கூடிய கிட்டத்தட்ட அத்தனையையும் சுருட்டி ஒரு ஷொபிங் பேக்கில் போட்டுக்கொண்டாள்

இறுதியாக அவள் என்னிடம்நாநா நோலிமிட் பேக் ஒன்னு இருந்தா தாங்களேன் என்றாள். அவள் இப்படிக் கேட்டதும் சட்டென்று ஏதோ ஒன்று உள்ளத்தை தாக்கியது.
நானும் வீட்டிலிருந்த ஒரு நோலிமிட் பேக்கை கொடுத்து விட்டு ஏன் என்னத்துக்கு நோலிமிட் பேக் என்று கேட்டேன். இல்ல நாநா வீட்டுக்கு போய் இதில இருக்கிற நல்ல உடுப்பையெல்லாம் நோலிமிட் பேக்கில போட்டு கடையில வாங்கின புதிய உடுப்பென்டு புள்ளகள்ட கொடுத்தா சந்தோசமாக பெருநாளைக்கு உடுத்துவாங்க அதுதான் நோலிமிட் பேக் கேட்டேன் என அவள் கூறி முடிக்குமுன்னே என் கண்களை நான் பொத்திக்கொண்டேன் கண்ணீர் வெளியே சிந்தாமல்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.