முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்- IUML; சு.சாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதுநீண்ட காலமாக சிறைச்சாலைகளிலே உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய அவர், ”நீண்ட காலமாக சிறைச்சாலைகளிலே 15 வருடங்களுக்கு மேலாக 49 முஸ்லிம்
சிறைவாசிகள் இருக்கிறார்கள். பல்வேறு சூழ்நிலைகளிலே பலரும் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவிலே 1400 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவர்களில் பலர் நோய்வாய் பட்டவர்கள் இந்திய தண்டனை சட்டத்திலே 14 வருடத்திற்கு மேல் இருந்தால் அவர்களையெல்லாம் விடுதலை செய்யலாம் என்று இருக்கின்றது. நோய்வாய் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். பல்வேறு சமயத்தை சார்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் 49 பேர் மட்டும் 15 வருடங்களாக சிறைச்சாலைகளிலேயே இருக்கிறார்கள். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யலாம்.” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், சிறைவாசிகள் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.