ஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 03




நான்கு வழிகள்-நான்கு ஆறுகள்
இஸ்லாம் கற்றுத்தராத நான்கு வழிகள் இமாம்கள் பெயரில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அவை ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி எனத் தெரிந்த ஒன்றுதான். இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின்  கொள்கையாம். உலகத்தில் எந்த தத்துவமாக இருந்தாலும் ஒரு வழிமுறையைத்தான் அவர்கள் கொள்கையாகக் கூறுவார்கள். ஆனால் மத்ஹப்வாதிகளிடம் நான்கு வழிமுறைகள்.
    ஒவ்வொரு மத்ஹப்வாதிகளும் தங்கள் மத்ஹபை உயர்த்திப் பேசுவதும் மற்றதை தாழ்த்துவதும் வாடிக்கை. ஹனபி பிக்ஹூ நூலில் ” இந்த அடியானின் மீது அல்லாஹுத்தஆலா ஷரியத்தைப்பற்றி மெய்ஞான ரகசிய ஒழியை பாய்ச்சியபோது அந்த வெளிச்சத்தில் அனைத்து மத்ஹபுகளையும் குறிப்பாக நான்கு மத்ஹபுகளையும் நன்கு நோட்டமிட்டேன். அவை ஒவ்வொன்றும் ஆறுகள் வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்தன.
    அந்த நதிகளில் அதிகப் பெரியதாகவும் அதிக நீளம் உடையதாகவும் ஹனபி மத்ஹபைக் கண்டேன். அதாவது எல்லா மத்ஹபுகளிலும் பெரிய மத்ஹபும், நீண்ட காலம் நிலைத்திருப்பதும் ஹனபீ மத்ஹப் ஒன்றுதான் என்பது எனக்குப் புலனாகிறது.”
    இவ்வாறு மெய்ஞான ஒழியில் ஹனபீ ஆறு ஓடுவதைப் பார்த்ததாகப் பகல் கணவு கண்டவர் அல்லாமா ஷாஃரானீ அவர்கள் தமது நூலான ‘மீ ஜானுல் இஃதிதாலில்’ சிறப்பித்து கூறுகிறார். மேலும் இதே நூலில் நபித்துவத்தின் பரிபூரண சுடர்கள் ஹனபீ மத்ஹப்புடன் இணைந்து நிற்கின்றன என்பதும் அவருக்குப் புலனாகின்றதாகப் புலம்புகிறார்.
    ஈஸா(அலை) அவர்களும் ஹனபி மத்ஹப்தான்
    இவர்களின் ஹனபீ மத்ஹபு வெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறதென்றால்  நபிமார்களுக்கும் ஹனபீ லேபிள் ஒட்டும் அளவிற்கு முற்றி உள்ளது. அதாவது கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப்பத்தில் அனுப்பபடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது அவர் ஹனபீ மத்ஹபு பிரகாரமே செயல்படுவார். நூல்: ஃபுஸிலே ஸித்தா
    ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபீ மத்ஹப்பிற்காகவே செயல்படுவார் என்று இமாமே ரப்பானீ முஜத்திதே அல்ஃபதானி அவர்கள் போற்றி புகழ்ந்து கூறுகிறார்களாம். இப்லீஸ் அல்லாஹ்விற்கே பாடம் போதித்தது போல் இப்லீஸ் ஏஜண்டுகளும் அல்லாஹ்விடமிருந்து ஷரியத் சட்டத்தை வாங்கி வந்த நபிமார்களுக்கே மத்ஹப் சட்டத்தை போதிக்க துணிந்து விட்டார்கள்.
    தமது  மத்ஹப்தான் சரியானது  மற்றவர்களின் மத்ஹப்  தவறானது  என்று  கூறுகிறது (ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18) ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443) மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியாம். அந்த நான்கில் ஒன்றை பின்பற்றுவதுதான் சரியான வழியாம் என்ன குழப்பமான கொள்கை! மத்ஹப்வாதிகளின் கொள்கைப்படி இஸ்லாத்திற்கு ஒரே வேதம்; ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடியில் இருந்து பெருகிய மனித குலம். மனித குலத்திற்கு ஒரே இறுதித்தூதர். ஆனால் மத்ஹப் சட்டங்கள்  மட்டும் நான்கு. இந்த குழப்ப தத்துவத்தையே ஆலிம்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்.
    இந்த மத்ஹப் சட்டங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை விளக்க ஒரு சிறிய உதாரனத்தை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான் ”கடலில் வேட்டையாடுவதும், புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது (5:96)ஆனால் “பிக்ஹின் கலைக்களஞ்சியம்”  என்ற “ஹனபி மத்ஹப்பின் சட்ட விளக்கக் கடல்” என்ற  நூலில் நண்டு,  இரால் ஆகியவை ஹராம்” எனக் கூறப்பட்டுள்ளது.
    அல்லாஹ் படைத்த கடலில் வேட்டையாடும் மீன்கள் எல்லாம் ஹலால் ஆனால் ஹனபீ சட்ட விளக்கக் கடலில் உள்ள நண்டு இரால் போன்றவை ஹராமானது எப்படி? வேதமும் இறுதி வேதம், இறுதித் தூதர் வஹீ முற்று பெற்றபின் முகவரியற்ற பொய்ச் செய்தியைத் தருவது யார்?
    எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்  (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. (26:221,223)
    நீ எனக்கு கியாமல் நாள்வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத்தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62)
    அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று முதல் மனிதரில் ஆரம்பித்து இன்று முதல் இறுதிவரை மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பான். இந்த வலையில் மாட்டிய ஆலிம்கள் எழுதிய நூல்களில் எல்லாம் குர்ஆன் ஹதீஸிற்கு முரணானச் செய்திகளை அதிகம் காணலாம்.
     ஷைத்தான் முஸ்லிம்களை ஏகத்துவப் பாதையில் செல்ல விடாமல் தனது ஏஜண்டுகள் மூலம் முன்னால் வந்து ஹனபீ மத்ஹபைப் பின்பற்றச் சொல்கிறான். பின்னால் வந்து ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுவது தான் சரியானது என்கிறான். வலது பக்கம் மாலிக் மத்ஹப் மகத்தானது என்கிறான். இடது புறம் சென்று  ஹம்பலி மத்ஹபே கண்ணியமானது என்று கூறி முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறான். ஆகவே முஸ்லிம்களே! சிந்தியுங்கள். உங்களுக்கு நேர்வழியில்  செல்ல அல்லாஹ்  இறக்கிய சட்டம்  வேண்டுமா? வேண்டாமா? தேர்ந்தெடுங்கள் உங்கள் இறுதி முடிவை
அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும். நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக
1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.  ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15   ஈகாழுல் ஹிமம் பக்கம் 100
‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.
ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
2. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்
ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.  ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63   ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4
ஈகாழுல் ஹிமம் பக்கம் 62
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.  ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 145
3. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-
நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!
ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.
உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149.  ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.
நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை. ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227    ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.
4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.
என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!
ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.
ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்
 ஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள்

‘வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும்இ மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அழ்ழாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.’ (அல்குர்ஆன் 24.19)
மேலே நபிவழிக்கு முரணான மத்ஹபுச் சட்டங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அச்சட்டங்கள் அனைத்தும் நபிகளாரின் போதனைகளை அவமதிக்கும் வகையில் எவ்வித சரியான ஆதாரங்களுமின்றி முழுக்க முழுக்க மனிதக் கற்பனையில் தோன்றியவை என்பதையும் நபிகளாரின் போதனைகளுக்கு முற்றிலும் நேர் மாற்றமானவையாக அமைந்தவை என்பதையும் தெரிந்து கொண்டோம்.
இனி  மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள்ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.
இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.