முத்துப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் மாயம்! போலீசார் தேடி வருகிறனர்.



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் செய்து உசேன் மகன் முஜிபுர்ரஹ்மான்(43) இவர் சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஐந்து மகன்கள் இவரது இரண்டாவது மகன் செய்யது அப்சல்(15), நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சென்ற மாதம் 21-ந்தேதி பள்ளிக்கு சென்ற செய்யது அப்சல் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் செய்யது அப்சல் கிடைக்கவில்லை. இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை முஜிபுர்ரஹ்மான் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா வழக்கு பதிவு செய்து மாணவன் செய்யது அப்சல் வீட்டில் கோபித்துக்கொண்டு எங்கையாவது சென்றாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து தேடி வருகிறார்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.