ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசி
ராமநாதபுரத்தில்  அடுத்த மாதம் 2ம் தேதி ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் வருகிற 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி ஸ்டேடியத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை  நடைபெறுகிறது. 

சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர் மற்றும்  நர்சிங் உதவியாளர் வெட்னரி, சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்கினக்கல், சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ்மென் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. அந்தந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் வருகிற 17ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம். 

மேலும் தேவைப்படும் விபரங்களுக்கு திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாக இணைப்பு கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர்  நல உதவி இயக்குநர் அலுவலகத்தின்  தொலைபேசி எண். 04366-220210, திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு அலுவலக தொலைபேசி எண். 0431- 2412254 என்ற எண்களில் அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.