அதிர்ச்சி : மோடி ஒரு கொலைகாரன் 18 வயதில் கொலை செய்துவிட்டு ஓடியவர்தான் மோடி?தன் 18 வயதில் கொலை செய்து விட்டு நரேந்திர மோடி வீட்டை விட்டு ஓடி விட்டார் என மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப்பெரிய அடியாள் எனக் கூறியதற்காக வேணி பிரசாத் வர்மா மீது ஏற்கெனவே வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னௌவில் பிரச்சாரம் செய்த வேணி பிரசாத், நரேந்திர மோடி 18 வயதில் கொலையைச் செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார் எனத் தெரிவித்தார்.
இதற்கு பாஜக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் இது தொடர்பாகக் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மிகக் கீழ்த்தரமாகப் போய்விட்டது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் வேணி பிரசாத் வர்மா தொடர்ந்து தவறிழைத்து வருகிறார். மோடி பற்றிய அவரின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது; முற்றிலும் அடிப்படையற்றது. வேணி பிரசாத்தின் இந்தக் கூற்றை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Thanks to kaalaimalar.net
See Video
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.