28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் !அரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்கள் இந்தியர்களை ஈர்க்க இஸ்லாமிய பண்புகள் காரணமாயிருந்தன, கல்யாணங்களில் கலந்தனர்.

இன்று வளைகுடா வாழ்க்கை திறக்கப்பட்டவுடன் அரபுகளின் செல்வம் ஹைதராபாத் எளிய முஸ்லீம்களை ஈர்க்க பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளன. பல பெற்றோருடைய நிலை நமது பெண் பிள்ளையாவது நன்றாக வாழட்டும் என்ற உயரிய ஆதங்கமே அரபுகளுக்கு திருமணம் செய்து வைக்கத் தூண்டுகிறது ஆனால் நடைமுறையில் அனைவருக்கும் சந்தோஷமான செல்வ வாழ்வு கிடைப்பதில்லை என்பதற்கு 'நஜியா'வின் வாழ்க்கை ஒர் உதாரணம்.

1981 ஆம் ஆண்டு அமீரக அரபு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஹைதராபாத் 'நஜியா'விற்கு 7 ஆண்டு மணவாழ்க்கையின் பலனாக இரு பெண்குழந்தைகளை பெற்ற பின் இறுதியாக 1988 ஆம் ஆண்டு மண வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்டு ஹைதராபாத் செல்ல விமான டிக்கெட் ஒன்றும் கிடைக்கிறது.

ஹைதராபாத் திரும்பிய நஜியாவிற்கு சில ஆண்டுகளுக்குப் பின் உள்ளூர் பழ வியாபாரி ஒருவருடன் மறுமணம் நடந்து இரு ஆண்மக்களையும் ஒரு பெண்ணையும் பெற்றெடுத்தார் என்றாலும் தன் இரு குழந்தைகளையும் நிரந்தரமாக பிரிந்து வந்த வலியை அவர் மட்டுமல்ல சிறுவயதில் பிரிந்த அவருடைய இரு பெண்குழந்தைகளும் அனுபவித்துள்ளனர் என்பதன் கள சாட்சியே 28 கழித்தும் தன் தாயை தேடி இணைந்த இனிய அதிசயம்.

கடந்த ஜனவரி மாதம் சில பழைய புகைப்படங்களையும் தன்னுடைய தாயின் பெயரையும் மட்டுமே சுமந்து வந்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சத்யநாராயணா அவர்களிடம் தாயை கண்டுபிடித்து தருமாறு கோருகிறார் அவரது மூத்த மகள் ஆயிஷா. கூடுதல் கமிஷனர் பாபு ராவ் போன்ற போலீஸாரின் அக்கரையான தேடலின் விளைவாக தன் குழந்தைகளின் அடையாளங்களை பற்றி மறந்திருந்த நஜியாவை கண்டுபிடிக்கின்றனர், தன் இளைய மகள் பாத்திமாவிற்கு ஆறாவது விரல் ஒன்று இருந்தது என்ற சிறிய தகவலின் வாயிலாகவும், திருமணம் நடத்தி வைத்த ஹைதராபாத் அரசு காஸியின் ஆவணங்களிலிருந்தும்.

பிறகென்ன, ஹைதராபாத் கமிஷனர் ஆபிஸில் நடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு எப்படி உணர்ச்சிகரமாக இருந்திருக்கும் என்பதை நீங்களே உள்ளங்களிலிருந்து யூகித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் எத்தனை நஜியாக்கள்?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.