ரெயில் நிலையத்தில் நடந்தது என்ன? நடித்து காட்டுகிறார்; ராம்குமாரிடம் 2-வது நாள் விசாரணைசென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர் சுவாதி(வயது 26) கடந்த மாதம் 24–ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார்(26) கடந்த 1–ந்தேதி கைது செய்யப்பட்டார்.

போலீசார் கைது செய்ய முற்பட்டபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த 4–ந்தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்ட ராம்குமாரை எழும்பூர் 14–வது நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) கோபிநாத் பார்வையிட்டு, அவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில் சுவாதி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியும், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனருமான தேவராஜ், ராம்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகோரி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மூர்மார்கெட் அல்லிகுளம் வளாகத்தில் செயல்படும் 13-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) கோபிநாத், ‘ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதையடுத்து ராம்குமாரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ராம்குமார் எந்த காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது, எந்த மாதிரியான விசாரணை நடத்தப்படும் போன்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம், சூளைமேட்டில் தான் தங்கி இருந்த தனியார் விடுதி, சுவாதி வேலை பார்த்த நிறுவனம் உள்பட பல இடங்களுக்கு ராம்குமாரை அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு ராம்குமாரை அழைத்து சென்று சுவாதியை கொலை செய்தது எப்படி என போலீசார் நடித்துக் காட்ட வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுவாதி கொலை செய்யப் பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் ராம்குமார் தங்கி இருந்த மேன்சன் ஆகிய இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்துகிறார்கள். சுவாதி கொலை தொடர் பாக ராம்குமார் அளிக்கும் தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்கிறார் கள். இதனை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள் ளனர்.

நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாகவும் அவரிடம் போலீசார் பல்வேறு கேள்வி களை கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நாளை வரை நடத்தப்படுகிறது. 3 நாள் காவல் நாளையுடன் முடிவடைவதால், ராம் குமாரை நாளை மாலை 5 மணி அளவில் எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.